மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதுபோல் பரவிய வீடியோ.. " விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

பர்கூர் அருகே தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடீயோ எடுத்து வெளியிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பள்ளியின் தமிழ் பாட முதுகலை ஆசிரியரான அனுமுத்துராஜ் என்பவர், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, மாணவர்களை அழைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய சொன்னதும், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அனுமுத்துராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்