மல்யுத்த வீரர்களை பற்றி கேட்டதற்கு தெறித்து ஓடிய மத்திய இணை அமைச்சர் - பின்னாடியே ஓடிய செய்தியாளர்கள்

x

மல்யுத்த வீரர்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் மத்திய இணை அமைச்சர் மீனாக்‌ஷி லேகி ஓட்டம் எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாக்‌ஷி லேகியிடம் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்காமல் அவசர அவசரமாக மீனாட்சி லேகி ஓட்டம் எடுத்தார்.

தனது காரை அடைந்தவுடன் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிவிட்டு அவர் சென்ற நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்