"கோவில் எங்களுடையது ... இடம் எங்களுடையது" - இரு பிரிவினரின் தீரா சண்டை

x

விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இருதரப்பும் கொடுத்த எழுத்துப்பூர்வமான ஆவணங்களை பெற்றுக்கொண்டார். இரு சமூகத்தை சார்ந்த 67 பேர் ஆஜரான நிலையில், இரண்டரை மணி நேர முதற்கட்ட விசாரணை நிறைவடைந்தது. இந்தக் கோயில் தங்களுக்கு சொந்தமானது என்றும், கோயில் அமைந்துள்ள இடம், தங்கள் ஊரை சேர்ந்தவருக்கு சொந்தம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், தங்கள் கோயிலுக்குள் வேறு யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் மேல்பாதி கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் என்பதால், தங்களை சாமி தரிசனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின மக்கள் எழுத்துப்பூர்வமாக மனுவாக அளித்தனர். தங்களது புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்