காசை எண்ணி வாங்கும் ஊர் தலைவரின் மகன்..திடீர் ட்விஸ்ட் கொடுத்த மக்கள் - தீயாய் பரவும் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஊராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், ஓடை பகுதியில் வீட்டு மனை பட்டா ஒதுக்கப்பட்டதா? என்ற கேள்வி வரை அது சென்றுள்ளது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலைக்கோட்டை ஊராட்சி தலைவரான அந்தோணியம்மாளின் மகன், அலெக்ஸ் என்பவர் பொதுமக்களிடம் பணத்தை எண்ணி வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. நெசவாளர்களான இவர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதற்காகவே லஞ்சப்பணம் பெறப்பட்டதாகவும் ஒரு தகவல் இதனுடன் சேர்ந்தே வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்