7 வயது சிறுவனுடன் ஏடிஎம்-யை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள்

ஆந்திராவில், 7 வயது சிறுவனுடன் சென்ற கும்பல், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்டிஆர் மாவட்டத்தில் உள்ள திருவூரில், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்து செல்ல, 7 வயது சிறுவனுடன் கொள்ளையர்கள் வந்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் மூடியை மட்டுமே உடைக்க முடிந்த நிலையில், லாக்கரில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுதொடர்பான தகவலின் பேரில் வந்த போலீசார், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com