எடையை குறைத்து காட்டிய வியாபாரியின் எலும்பை எண்ணிய ஊர் மக்கள் - தர்ம அடி வாங்கவிட்ட மெஷின் சத்தம்..!

x

ஓசூரில் ரிமோட் சென்சார் மூலம் எடை மெஷினை இயக்கி நூதன கொள்ளையில் ஈடுபட்டவரை பொது மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஓசூர் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய வேர்கடலைகள் மற்றும் ராகி பொருட்களை தமிழகம் முழுவதுமுள்ள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி

ஆறுமுகம் தான் கொண்டு வந்த எடைமெஷினை ரிமோட் சென்சார் மூலம் இயக்கி பொருட்களின் அளவை குறைவாக காட்டியுள்ளார்.

மெஷினில் இருந்து வந்த சத்தத்தால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் சோதனை செய்ததில் ஆறுமுகம் சிக்கினார்.

இதையடுத்து அவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் பின் போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்