அடுத்தடுத்து வரிசையாக மோதிக்கொண்ட சொகுசு பேருந்துகள்.. பயணிகளின் நிலை..? அதிர்ச்சி சம்பவம்

திண்டிவனம் அருகே பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

திண்டிவனம் சென்னை புறவழிச் சாலையில், டீசல் இல்லாமல் ஏர் லாக் ஆகி நின்ற ஆம்னிபஸ் மீது, பொள்ளாச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டு

இருந்த ஆம்னி பஸ் மோதியது.

தொடர்ந்து அந்த பேருந்தின் மீது திருநெல்வேலி இருந்து சென்னை வந்த அரசு விரைவுப் பேருந்தும் மோதியது.

இந்த விபத்தில் லலிதாம்பிகை, ரேவதி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 10 பேர் லேசான காயமடைந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com