ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் புகுந்த நீர் | ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலி |விவசாய பயிர்கள் நாசம்

x

சூளகிரி அருகே ஏரிக் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதிபுரம் நகர் ஏரியின் கரை, நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக உடைந்து, ரெளத்ரப்பள்ளி கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. இதில் நாராயணப்பா என்பவரின் கோழிப்பண்ணையில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. மேலும் 150 ஏக்கரிலான விவசாய பயிர்களும் நாசமடைந்துள்ளது. ஏரிக்கரை பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ரெளத்ரப்பள்ளி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்