தந்தையை காவு வாங்கிய 'விஷச்சாராயம்'... உயிருக்கு போராடும் தாய்..! கேள்விக்குறியான பிஞ்சுகளின் எதிர்காலம்

x

மதுராந்தகம் அருகே விஷச்சாராயத்தால் தந்தை உயிரிழந்த நிலையில் தாயும் கவலைக்கிடமாக உள்ளதால் 2 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

விஷச்சாராயம் அருந்திய செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணையை சேர்ந்த சின்னத்தம்பி உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவர்களுடைய 5 வயது மற்றும் 3 வயதான இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தன் தந்தை இறப்பிற்காக அரசு கொடுத்த நிவாரண நிதிக்கான காசோலையை விவரம் தெரியாத குழைந்தைகள் அமைச்சர் அன்பரசனிடம் பெற்றுக்கொண்டது பார்ப்போரை கண் கலங்க செய்தது.


Next Story

மேலும் செய்திகள்