ராஜராஜசோழன் குடும்பத்தினர் பயன்படுத்திய பிரமாண்ட குளம்! இன்றும் இருக்கும் அதிசயம்

x

கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜசோழன் பரம்பரையினர் பயன்படுத்திய 8 ஏக்கர் குளம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமன்னன் ராஜராஜசோழன் ஆட்சிபுரிந்த கும்பகோணம் பகுதியில் உள்ள சோழன்மாளிகை, உடையாளூர், பழையாறை ஆகிய ஊர்கள் இன்றும் அதே பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழன்மாளிகை கிராமத்தில், ராஜராஜ சோழன் வணங்கிய கைலாசநாதர் சுவாமி திருக்கோவில், தற்போது சிதிலமடைந்து புதருடன் காட்சியளிக்கிறது. அந்தக் கோயிலுக்கு அருகே மன்னர் வம்சத்தை சேர்ந்தவர்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட திருமலைராஜன் குளம், அந்த குளத்தின் அருகே மன்னர் காலத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட வற்றாத கிணறு ஆகிய இடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்