மளமளவென பரவிய தீ...கருகிய மூதாட்டி - திருவள்ளூவரில் பரபரப்பு சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். நார்சம்பாளையம் கிராமத்தில் சுமார் 55 குடிசை வீடுகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை 2 குடிசை வீடுகளில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில், வீட்டில் இருந்த ராஜம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com