பைக்கை திருடிவிட்டு பஸ்சில் ஏறிய போதை ஆசாமி...ரவுண்டு கட்டிய பொதுமக்கள் - திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். வேடசந்தூர் பேருந்து நிலைய நிழைவு வாயில் அருகே மூலிகை கடை நடத்தி வரும் சம்சுதீன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை தனது கடை முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவ்வழியாக மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து சம்சுதீன் கூச்சலிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகத்தை திருடியவனை துரத்தி சென்றனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி விட்டு பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து இளைஞரை கீழே இறக்கிய பொதுமக்கள் போலீசாரை வரவழைத்து போதை ஆசாமியை ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்