குழந்தைகள் நல காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

x

குழந்தைகள் நல காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

குழந்தைகள் நல காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், சாலைமேட்டில் அமைந்துள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

உணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த அவர், படுக்கை வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பு எடுத்த அவர், அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருப்பூரில் குழந்தைகள் நல காப்பகத்தில் தரமற்ற உணவு உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, இன்று விழுப்புரத்தில், ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.Next Story

மேலும் செய்திகள்