கேஸ் நிரப்பும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்

பொள்ளாச்சியில் எரிவாயு நிலையத்தில் காருக்கு கேஸ் நிரப்பும்போது, திடீரென்று கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டேனியில் என்பவர் தனது காருக்கு கேஸ் நிரப்பும்போது, திடீரென்று காரின் முன்பகுதியில் தீப்பிழம்பு உருவாகி, கார் முழுவதும் பரவியது. இதனால், இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கார் உரிமையாளர், கேஸ் நிரப்பும் இடத்தில் இருந்து காரை தீயுடன் ஓரமாகத் தள்ளி விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com