வீரர்களுக்கு தண்ணி காட்டிய காளைகள்.. உரிமையாளர்கள் அள்ளிச்சென்ற பரிசுகள்..! | Madurai | Jallikattu

x

இதேபோல, ஜல்லிக்கட்டில் காளையர்களுக்கு தண்ணி காட்டி, அவர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான பரிசுகளை காளைகளின் உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர். சிறப்பாக விளையாடிய காளைக்கான முதல் பரிசாக, இருசக்கர வாகனத்தை, காத்தனேந்தலை சேர்ந்த காமேஷ் என்பவர் பெற்றுக் கொண்டார்.

2வதாக தேர்வு பெற்ற காளைக்கான வாஷிங்மெஷின் பரிசை, அதன் உரிமையாளரான வில்லாபுரம் கார்த்தி பெற்றுக் கொண்டார். இதேபோல மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த லோடுமேன் முருகனுக்கு, சிறந்த காளைக்கான 3ஆவது பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்