பேஸ்புக்கில் வந்த விளம்பரம்...ஆடர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - வந்தது என்ன..? வீடியோ வெளியிட்ட பெண்

x

பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து அதி வேகம் திறன் கொண்ட வாட்டர் பம்ப் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார் . இந்த நிலையில் கொரியர் மூலம் வந்த ஆர்டரை பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஆர்டர் செய்த வாட்டர் பம்புக்கு பதிலாக, போலியாக பைப் மற்றும் பவுடர் பாக்கெட் மட்டும் வந்திருந்தது. இதை பார்த்த வாடிக்கையாளர் அதை வீடியோ எடுத்து, யாரும் இது போன்ற முகநூலை பார்த்து ஏமாற வேண்டாம் என வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்