கோலாகலமாக திறக்கப்பட்ட வசந்த் அன் கோ நிறுவனத்தின் 109 வது கிளை | Vasanth & co | Nellai

x

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசந்த் அன் கோ வின் 109வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வசந்த் அன் கோ நிறுவனரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார் புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், கன்னியாகுமரி தொகுதி நாடாளமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் தங்க மலர் ஜெகநாத், காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். முதல் விற்பனையை வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்