காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்யும் அந்த விஷயம்

x

2017ஆம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற போது, தன்னை சந்திக்க வருவோர் பொன்னாடை அணிவிப்பதை தவிர்த்து புத்தகம் வழங்குமாறு ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது முதலமைச்சராக உள்ளபோதும் அதையே பின்பற்றி வருகிறார். அவ்வாறு பெறப்பட்ட ஒன்றரை லட்சம் புத்த‌கங்களை பல்வேறு நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, அரசு நூலகங்களுக்கு 7 ஆயிரத்து 740 புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளார். சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்