"அவங்க கல்யாணத்துக்கு ஏன் போனீங்க" திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழ வைத்த கொடூர ஊர் பஞ்சாயத்தார்

x
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கியும், திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழ வைத்ததாகவும் கூறி இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
  • ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுமன். இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
  • இதில், இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஊர்மக்களும், நண்பர்களும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
  • இந்நிலையில், இந்த திருமணம் ஊர் சமுதாயத்தின் கட்டுப்பாட்டை மீறி நடைபெற்றதாக கூறி தம்பதி இருவரையும் ஊரில் இருந்து ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
  • இதனிடையே, திருமணத்தில் பங்கேற்றவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
  • இதில், ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஊரில் சேர விரும்பினால், அபராதம் கட்டியும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இது தொடர்பாக இளைஞர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சிலர் அபராதம் கட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்