தாய்லாந்து டூ சென்னை - பாம்பு, குரங்குகளை கொண்டு வந்த பயணி

x

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பந்து மலைப்பாம்பு குட்டிகள், குரங்கு, ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்ததில், அரிய வகை உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.

மர்மோசெட் வகையை சேர்ந்த மூன்று சிறிய குரங்கு குட்டிகள், 45 பந்து மலைப்பாம்பு குட்டிகள், இரண்டு நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவை இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை பறிமுதல் செய்து பயணியிடம் விசாரணை நடத்தியதில், எந்த ஆவணங்களும் இன்றி கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர், மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், இவை அரிய வகையை சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்