அர்ச்சகர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றிய கோயில் நிர்வாகம் - அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு கடிதம்

x

மாமல்லபுரத்தில், 3 நாள் யாக குண்ட பூஜை நடத்தியதற்கு சம்பளம் தராமல், கோயில் நிர்வாகத்தினர் ஏமாற்றுவதாக அர்ச்சகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிசேகம் நடத்துவதற்காக, 70 அர்ச்சகர்கள் யாக சாலை பூஜை செய்தனர்.

இதற்காக பேசப்பட்ட நான்கரை லட்ச ரூபாயில், 3 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஒன்றரை லட்சம் ரூபாயை கோயில் நிர்வாகம் தராமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு அர்ச்சர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்