திடீரென காணாமல் போன கோயில் சிலைகள்... வசமாக சிக்கிய வட்டார கல்வி அலுவலர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

தஞ்சை பட்டுக்கோட்டை என்ஜிஓ காலனியைச் சேர்ந்த 59 வயதாகும் செல்லதுரை, வலங்கைமானில் வட்டார கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது, அதே கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த விஸ்வநாத சுவாமி கோயிலில், மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோயிலுக்குச் சொந்தமான சிலைகள், பள்ளி வளாக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

விநாயகர், மூஞ்சூறு ஆகிய 2 கற்சிலைகள் திடீரென காணாமல்போனதால், கோயில் செயல் அலுவலர் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் செல்லதுரை திருடியது தெரியவந்தது. செல்லதுரையை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 2 கற்சிலைகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்