கொளுத்தும் வெயிலுக்கு Bye.. Bye.. வெளுக்க போகுது மழை- குஷியில் மக்கள்

x

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 9,10 ஆகிய தேதிகளில் உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்