ஜல்லிக்கட்டு நடைபெறும் முறையை படத்துடன் தமிழக அரசு விளக்கம் | Jallikattu | Supremecourt

x

ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை தொடர்பாக வரைபடத்துடன் நீதிபதிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது எப்படி என்ற விவரங்கள் குறித்தும் தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேவைப்பட்டால் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு முறை தொடர்பாக படத்துடன் நீதிபதிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்