2 மணி நேரம் கட்டி வைத்து அடித்தார்கள்" - இந்திய கடற்படை மீது தமிழக மீனவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

x

2 மணி நேரம் கட்டி வைத்து அடித்தார்கள்" - இந்திய கடற்படை மீது தமிழக மீனவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

நடுக்கடலில் கட்டி வைத்து அடித்ததாக, இந்திய கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கிளம்பிய மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு மீனவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீதமுள்ள 9 மீனவர்களும், ராமேஸ்வரத்தில் இருந்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது பேசிய மீனவர்கள், நடுக்கடலில் 2 மணி நேரம் கட்டி வைத்து இந்திய கடற்படை வீரர்கள் இரும்பு கம்பியால் அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டினர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்