திடீரென சைக்கிளில் படையெடுத்த போலீஸ்.. ஸ்தம்பித்து போன செங்குன்றம் - "காரணம் இதுதானா..?"

x

செங்குன்றம் காவல் துணை ஆணையர், தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அம்பத்தூரின் முக்கிய பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்றனர். இரவு நேரங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், சென்னை அம்பத்தூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணிவண்ணன், அம்பத்தூர் உதவி காவல் ஆணையர் கிரி, சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் சைக்கிளில் ரோந்து சென்றனர். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்