நொடிக்கு நொடி மாறும் வானிலை.. திடீரென தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலானது சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிந்தது. அதன்படி தேனியில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், வைகை ஆறு உற்பத்தியாகும் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளிலும்,நாகையில் நாகூர், வேளாங்கண்ணி, வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்தது. மேலும் ஊட்டியில் அவலாஞ்சி, எமரால்டு, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளிலும் பரவலான மழை காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்