டெல்லியில் பள்ளிகளை மூட திடீர் உத்தரவு

x

யமுனை நதி வெள்ளத்தில் இருந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் தலைவர்களுக்கும் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யமுனை கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்