மோசடி செய்த நபர் திடீர் மரணம் - குழப்பத்தில் பணம் கட்டிய மக்கள் - பின்னணி என்ன?

x

மதுராந்தகம் பஜார் பகுதியில், அனந்தகிருஷ்ணன் என்பவர் நிதி நிறுவனம் மற்றும் நகைக் கடை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில், மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் மற்றும் நகைச்சீட்டு கட்டி வந்துள்ளனர். இதனிடையே அனந்த கிருஷ்ணன் கடந்த 4-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவருடைய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அவரிடம் சீட்டு பணம் கட்டியவர்கள், அவருடைய உறவினர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் தர முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அனந்தகிருஷ்ணனிடம் ஒரு லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் செலுத்திய பொதுமக்கள், வியாபாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், அனந்த கிருஷ்ணன் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, சொகுசு வீடு, திருமண மண்டபம் ஆகியவற்றை கட்டி உள்ளதாகவும், அந்த சொத்துக்களை ஜப்தி செய்து தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்