மாப்பிள்ளை வீரர் கோயிலில் வினோதம்..! பக்தர்கள் மீது வீசும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன ஆகும்..?

x

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மாப்பிள்ளை வீரன் கோவில் பங்குனி திருவிழாவில் வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

வேதாரண்யம் அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருமேனி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் மீது வீசப்படும் வாழைப்பழங்கள் உண்பதால் நோய் வராமல் ஆரோக்கியமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பக்தர்கள் மண் குதிரைகள் மற்றும் பொம்மைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் வளாகத்தில் வைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்