வேளாங்கண்ணியில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி...தத்ரூபமாக இயேசு உயிர்த்தெழும் காட்சி

x

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி...தத்ரூபமாக இயேசு உயிர்த்தெழும் காட்சி - மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்போது, சிலுவை கொடியை கையில் தாங்கி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி, மத்தாப்பு ஜொலிக்க தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. அதை கண்டுகளித்த கிறிஸ்தவர்கள், கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு பிரார்த்தனை செய்து ஈஸ்டர் திருநாளை கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்