மேடையில் ரஜினி போல் பேசி காட்டிய சூரி

x

விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், அக்டோபர் மாதம் வெளியாகும் என, நடிகர் சூரி தெரிவித்தார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி பங்கேற்றார். அப்போது, கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய சூரி, விடுதலை படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியது மறக்க முடியாத தருணம் என, குறிப்பிட்டார். மேலும், ரஜினிகாந்த் போலவே மேடையில் சூரி பேசிக் காட்டியது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்