இந்திய எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில், தீபாவளியை ஒட்டி வாண வேடிக்கைகள் கோலாகலமாக வெடிக்கப்பட்டன. வானில் மின்னிய வாண வேடிக்கைகள், காண்போரை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கானாவின் ஐதராபாத்தில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஏராளமானோர், பிரசித்தி பெற்ற நாகலட்சுமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். கூட்டம் கூட்டமாக வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்