வரிசையாக அடுத்தடுத்து முட்டைகளை கக்கிய பாம்பு - தீயாய் பரவும் வீடியோ

x

கடலூர் அருகே முட்டைகளை விழுங்கிய பாம்பு தான் பிடிபட்டவுடன் விழுங்கிய முட்டைகளை கக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம், சின்ன காரைக்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தன் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக பாம்பு ஆர்வலர் செல்வா என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த செல்வா பாம்பை பிடிக்க முயன்றபோது, பாம்பு முட்டைகளை கக்கியது.

அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, வீட்டின் தோட்டத்தில் உள்ள கோழிக்கூண்டை பார்த்தபோது, கோழியைக் கொன்று 8 முட்டைகளை பாம்பு விழுங்கியது தெரியவந்தது.

பின்னர், பாம்பு உயிருடன் மீட்கப்பட்டு, காட்டில் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்