மீன்பிடி தடைக்காலம் எதிரொலி - கணிசமாக உயர்ந்த மீன்களின் விலை..மீன்களை வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

x

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக, சென்னை வானகரத்தில் உள்ள மீன் சந்தையில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

போதுமான அளவு மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். வஞ்சரம் ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், சங்கரா 200 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையானது


Next Story

மேலும் செய்திகள்