சொந்த மண்ணிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி... மிரட்டி விட்ட ஆப்கானிஸ்தான்

x

இலங்கைக்கு எதிரான முதல ் ஒருநாள் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

பல்லகெல்லேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் சதம் விளாசினார்.

பின்னர் ஆடிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

38வது ஓவரில் 234 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட் ஆனது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்