"ஜூன் -1ல் பள்ளிகளை திறக்க கூடாது.." - ராமதாஸ் வலியுறுத்தல்

x

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்... தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2வது வாரத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை சுட்டிக் காட்டிய அவர், கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்