ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் திடீரென சட்டையை கழற்றிய சல்மான்... ரசிகர்களை பார்த்து சொன்ன வார்த்தை

x
  • கிஸி கா பாய் கிஸி கி ஜான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, திடீரென தன் சட்டை பட்டன்களை கழற்றிய நடிகர் சல்மான் கான், "இதெல்லாம் VFX-னு நெனச்சீங்களா" என ரசிகர்களை பார்த்து கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
  • அண்மைகாலமாக அவர் உடல் எடை கூடி விட்டார் என்றும், திரைப்படங்களில் தெரியும் சிக்ஸ் பேக்ஸ் VFX உதவியால் தான் என்றும் அவரை சிலர் கலாய்த்து வருகின்றனர்.
  • இதற்கு பதிலடியாகத்தான் மேடையில் சல்மான் கான் அதிரடி காட்டியுள்ளார்.
  • ஆனால் இதிலும் "சிக்ஸ் பேக்ஸ்லாம் தெரியலயே...அதனால் தான் இரண்டு பட்டன்களோடு நிறுத்திவிட்டார்" என கமெண்ட் அடித்து வருகின்றனர் சில ரசிகர்கள்.
  • முன்னதாக துபாயிலிருந்து இறக்குமதி செய்த புதிய புல்லட் ப்ரூஃப் SUV காரில் சல்மான் வலம் வரும் வீடியோ வைரலானது.
  • கொலை மிரட்டல் ஈ-மெயில்கள் வந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த காரின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்