ரூ.18,100 கோடி நெடுஞ்சாலைத் திட்டங்கள் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி | PM Modi | NHAI

x

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக, தில்லி - தௌசா - லால்சோட் இடையே 246 கிலோ மீட்டர் தூரத்தை ராஜஸ்தானில் உள்ள தௌசாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கிருந்தபடி, 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நவீன சாலைகள், ரயில் நிலையங்கள், மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் கட்டப்படுவதால், நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்கும் என்று கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முயற்சி எடுத்துள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்