பாறாங்கல் போல் ஆன மசாலாக்கள்.. அள்ள அள்ள வந்த கெட்டுப்போன இறைச்சி - அதிர்ந்த அதிகாரிகள்

x

காரைக்குடியில் உணவகங்கள், மதுபானக்கூடங்களில் கெட்டுப்போன 70 கிலோ இறைச்சிகள் மசாலாக்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரைக்குடி நகரின் முக்கிய பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஆய்வு செய்ததில் காலாவதியான மசாலாக்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள உணவகத்தில் காலாவதியான இறைச்சிகள், பல நாட்களாக டப்பாவை திறக்காத மசாலாக்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மதுபான கூடத்திற்கு சென்று சுகாதாரமற்ற முறையில் வெட்டப்பட்ட வெள்ளரிக்காய், இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, எச்சரிக்கை குறிப்பாணை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்