ரோகித் சர்மாவின் 30 வது சதம்...சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ரோகித் சதம்

ரோகித் சர்மாவின் 30 வது சதம்...சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ரோகித் சதம்
x

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ரோகித் சதம்

அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா


இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று நடக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இருவரும் சதம் விளாசி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா (101) ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்