ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
x
தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி வரை லேசான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் இன்று அதிகாலை முதலே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையும் பெய்தது

இந்த சூழ்நிலையில் தற்போது ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தங்கச்சிமடம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலை வருகிறது....Next Story

மேலும் செய்திகள்