ராமநாதசாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு - அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார்

x

தமிழகம் முழுவதும் இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்படுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரவித்துள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சாமி தரிசனம் செய்த பக்தர்களிடம், கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில் வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தை ஆய்வு செய்த ஐஐடி மற்றும் தொல்லியல் துறையினர், அந்த மண்டபத்தை அகற்றுமாறு பரிந்துரைத்துள்ளதாக கூறினார்


Next Story

மேலும் செய்திகள்