"இந்து கோயில்களை காப்பாற்றுங்கள்"... இஸ்லாமியர் தொடர்ந்த வழக்கு - அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் சோழர்களின் வெற்றியின் அடையாளமாகத் திகழ்ந்த பாசி அம்மன் கோவில் எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த கோவிலை புனரமைத்து பாதுகாக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கலந்தார் ஆசிக் என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் கலந்தார் ஆசிக் ஆஜராகி, கோவிலின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களைத் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து, மனு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

பின்னர், கோவிலின் முழு விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்