#Breaking || ராமஜெயம் வழக்கு..10 ஆண்டு மர்மம்.. ஒரு டெஸ்ட்டில் அவிழுமா?

ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
#Breaking || ராமஜெயம் வழக்கு..10 ஆண்டு மர்மம்.. ஒரு டெஸ்ட்டில் அவிழுமா?
x

தமிழ்நாட்டை உலுக்கிய படுகொலைகளில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு பிரதானமானது. இவர் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். 2012ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி ராமஜெயம் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாகியும் கொலைக்கு பின் உள்ள மர்மம் இன்னும் விலக்கப்படவில்லை. தற்போது சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.


அதன்படி வழக்கில் சந்தேகப்படும்படியான மொத்தமாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்தது. ஒருவர் மறுக்கவே, எஞ்சிய 12 பேரிடம் சோதனை நடத்த சிபிசிஐடி நீதிமன்ற அனுமதி கோரியது. நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதால், 12 பேரிடமும் படிப்படியாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம் சோதனை தொடங்கியுள்ளது.

இதற்காக டெல்லியிலிருந்து பிரபல தடயவியல் நிபுணர் மோசஸ் வரவழைக்கப்பட்டு, அவர் தலைமையில் மயிலாப்பூரில் உள்ள

தடயவியல் கூடத்தில் இது நடந்து வருகிறது. நால்வரிடமும் தனித்தனியாக கேள்வி கேட்கப்பட்டு, பதில் சொல்லும்போது இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனிப்பார்கள். அதனடிப்படையில் அவர்கள் உண்மை சொல்கிறார்களா? பொய் சொல்கிறார்களா? என்பதை நிபுணர்கள் கண்டறிவார்கள்.


அதேபோல சமீபத்தில் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் அமைந்தன. கொலையாளிகள் காரில் தப்பிச் சென்றிருந்தால் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளில் அது பதிவாகியிருக்கலாம். அதை கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்பது சிபிசிஐடியின் மற்றொரு கோணம். இதனடிப்படையிலும் ஒருபுறம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு கோணத்தில் கொலையாளிகள் நிச்சயம் சிக்குவார்கள் என சிபிசிஐடி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்