அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பம்... அப்செட் ஆனா காங்கிரஸ் தலைமை - என்ன நடக்கிறது ராஜஸ்தானில் ?

x

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரையும் சாமாதானம் படுத்தும் வேலையில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சச்சின் பைலட் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் கட்சிக்கு எதிராக கொடிப்பிடிப்பதாகவும், பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார். கட்சிக்கு துரோகம் இழைக்கும் சச்சின் பைலட் ஒருபோதும் முதலமைச்சராக ஆக முடியாது என்றும் அசோக் கெலாட் சாடினார். அவரின் இந்த கடுமையான குற்றச்சாட்டு குறித்து பேசிய சச்சின் பைலட், மூத்த அரசியல் தலைவரான அசோக் கெலாட், அவதூறு பேசுவது அழகல்ல என கூறியுள்ளார். தன் மீது நீண்ட காலமாக அசோக் கெலாட் குற்றம்சாட்டி வருவதாக கூறியுள்ள சச்சின் பைலட், அடிப்படை ஆதாரமற்ற புகார்களை அவர் கூறி வருவதாகவும் பதிலடி கொடுத்தார். இருவரின் இந்த மோதல் போக்கு ராஜஸ்தான் காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இருவரின் கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அனைவரது கவனமும் அவருக்கு ஆதவரவாக மட்டுமே இருக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கண்டித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்