ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா - தஞ்சை பெரியகோவிலில் பந்தகால் முகூர்த்தம்

x

ராஜராஜ சோழனின் ஆயிரத்து 37 வது சதய விழா வருவதை முன்னிட்டு, பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வரும் நவம்பர் 3-ஆம் தேதி வருவதையொட்டி, சதய விழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி திருமுறை பாடி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்