"இன்ஜினியரிங் படித்து Zomatoவில் வேலை பார்க்கும் நிலை" - ராகுல் விமர்சனம்

x

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், பொறியியல் பட்டதாரிகள் Zomatoவில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். பா.ஜ.க மற்றும் டி.ஆர்.எஸ்.(TRS) ஆகிய கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என விமர்சித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நெசவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வோம் என்றார்.Next Story

மேலும் செய்திகள்