24 மணி நேரமும் படு ஜோர்.. பள்ளி மாணவர்களை தறிகெட செய்யும் லாட்டரி சீட்டு விற்பனை.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட சமூக ஆர்வலர்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்