தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
- ஒசூர் அருகே உள்ள ஜொனபண்டா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, ஒசூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தன் என்பது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த அவருக்கு, புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்ததால் மன வருத்தத்தில் இருந்த ஜனார்த்தனன் தற்கொலை செய்து இருக்கலாம் என ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இது குறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

